செய்திகள்விருது | விழா | கூட்டம்

சோழவந்தானில் காமராஜர் திருவுருவ சிலைக்கு இந்து நாடார் உறவின்முறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

The Hindu Nadar fraternity paid respect to Kamaraj Thiruvuruva statue in Cholavantan by garlanding it

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் திருவருவுச்சிலைக்கு, அவரது 120 பிறந்த நாளையொட்டி சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

குருவித்துறை அய்யப்ப நாயக்கன்பட்டி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.பி. கந்தசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சோழவந்தான் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் திரவியம் தலைமையில் ஒன்றிய செயலாளர் விருமப்பராஜன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் நிர்வாகிகள் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன், மீனவரணி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன் விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் முல்லை சக்தி, நகர அவை தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய இணைச்செயலாளர் மீனாட்சி, மாங்கனி, ரபீக், சுந்தர், வழக்கறிஞர் காசிநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் நகர நாம் தமிழர் அமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: