
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சொக்கிகுளம் உழவர் சந்தையில் மாலை நேரக்கடைகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 28.07.2022. முதல் மாலை நேரக்கடைகள் தினமும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை செயல்படும்.
மாலைநேரக் கடைகளில் விவசாயிகளின் விளை பொருட்களான சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், முட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் மாலை நேரத்தில் சொக்கிகுளம் உழவர்சந்தையில் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் விவசாயிகள் லாபம் பெறுவதுடன் பொதுமக்களும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி பயன் பெறமுடியும். இதற்கு
வேளாண்மை துணை இயக்குநா (வேளாண் வணிகம்) மதுரை அவர்களை தொடர்பு கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.