
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த ராஜகோபால் – ஸ்வர்ணலட்சுமி-க்கு 9 வயதில் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி உள்ளது.
அதே பகுதியில் சிறுமி தனது 4 நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் சிறுமியின் வாயை பொத்தி கடத்த முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தோழிகள் அந்த அடையாளம் தெரியாத பெண்மணியிடம் முறையிட்டு சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை பிடித்து அருகிலுள்ள செல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசாரின் விசாரணையில். சிறுமியை கடத்த முயன்ற பெண் செல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பிரசிலா என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து சிறுமியை கடத்த முயன்ற பிரசிலா என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1