செல்லூர் கழிவுநீரேற்று நிலையம் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் ஆய்வு
Sellur Sewage Treatment Plant | Mayor V. Indrani Ponvasant study

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 ,செல்லூர் கழிவுநீரேற்று நிலையத்தில், மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்லூர் கழிவுநீரேற்று நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று தொட்டிகள், மின்மோட்டார்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து , செல்லூர், வைகை ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக , மண்டலம் 2 வார்டு எண்.34 அண்ணா நகர் எஸ்.எம்.பி.காலனி பகுதிகளில் ,தீவிர தூய்மைப் பணிகள் நடைபெறுவதை மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காலனியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பைகளை போடுமாறும், காலனி பகுதியினை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிநகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கந்தப்பா, சந்தனம், ஆரோக்கிய சேவியர், அலெக்ஸ்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுப்புராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து பங்கேற்றனர்.