செல்லூரில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபாடி வீரர்கள் சிலை; அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்தார்
Madurai News

மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு ரவுண்டானாவில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபாடி வீரர் சிலை மற்றும் திருப்பரங்குன்றம் ரவுண்டானாவில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் மயில் சிலையினை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ (20.02.2021) திறந்து வைத்து பேசும்போது தெரிவித்ததாவது:
மதுரை மாநகராட்சியின் சார்பில் செல்லூரில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கபாடி வீரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பூங்காக்கள், எப்பொழுதும் அழகாக இருப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து நிரந்தரமாக தண்ணீர் இருப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்லூர் பகுதிக்கே பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த கபாடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் பேஸ்காட் பால் விளையாட்டு, வாலிபால் விளையாட்டு. டென்னிஸ்க்கு, ஹாக்கி, புட்பால் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கபாடி வீரர்களை போற்றும் வகையில் செல்லூரில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
மதுரையின் கலாச்சாரத்தையும் தொன்மையும் போற்றும் வகையில் வெளியூர் பயணிகள், சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக நான்கு ரவுண்டாக்கள் தேர்வு செய்யப்பட்டு பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் மதுரையின் புகழை போற்றும் வகையில் மீனாட்சியம்மன் தேரும், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சியை போற்றும் வகையில பழங்காநத்தம் ரவுண்டானாவில் பத்து தூண்களும், ஆரப்பாளையம் ரவுண்டானாவில் மதுரை பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிகட்டு காளை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முருகபெருமானின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் மயில் சிலையும், செல்லூரி கபாடி வீரர்களுக்கான சிலையும் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை மேம்படுத்துகின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதிகளை ஒதுக்கி, வருகிறார்கள். இளைஞர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தினால் அந்த விளையாட்டு வீரரூக்கு ஒரு தலைமை பண்பும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் வந்து விடும். இளைஞர்களை நல்வழிப்படுத்துவது விளையாட்டாகும். எனவே இளைஞர்களுக்கு விளையாட்டு பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடியும், 2வது பரிசு பெறுவர்களுக்கு ரூ.1 கோடியும், வெங்கலபதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்க ஆணையிட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி ரூ.75 லிருந்து ரூ.250 ஆக உயர்த்தி வழங்கியது முன்னாள் முதலமைச்சர் அவர்கள் என்பது உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் துணைத் தலைவர் சோலைராஜா, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், கபாடி வீரர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.