செய்திகள்போலீஸ்

செல்லூரில் சகோதரர் விபத்தில் இறந்த சோகத்தில் சகோதரி தூக்கு போட்டு தற்கொலை

Brother's death in an accident in Sellur, sister hangs herself

சகோதரர் விபத்தில் இறந்த சோகத்தில் மனம் உடைந்த சகோதரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . செல்லூர் போஸ் தெருவை சேர்ந்தவர் தங்க ராஜா மனைவி ஐஸ்வர்யா 39. இவருடைய சகோதரர் மூன்று மாதங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கி பலியானார்.

இதனால் மன அழுத்தத்தில் ஐஸ்வர்யா இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவர் தங்க ராஜா செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: