செய்திகள்விருது | விழா | கூட்டம்

செல்லம்பட்டியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.13,08,25000 கடன் உதவி வழங்கும் விழா

13,08,25000 loan grant ceremony to Women Self Help Group in Chellambatti

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில், உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வங்கி ஒருங்கிணைப்பு மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் உசிலம்பட்டி, செக்காணூரணி, சிந்துபட்டி, விக்கிரமங்கலம், மூணாண்டிபட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.13,08,25000 கடன் வசதி வழங்கப்பட்டது.

இதில், திட்ட உதவி அலுவலர்கள் வெள்ளைப்பாண்டி, கலைச்செலவராஜன், அழகர்சாமி காளிதாஸ், குமாரசாமி, சின்னத்துரை, முன்னோடி வங்கி மேலாளர் அனில், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தாய்ப்பிள்ளை, அன்னபாண்டி, பூங்கொடி, வனிதா மற்றும் கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: