தெருக்கள்மதுரை

செல்லத்தம்மன் கோயில் தெரு – 08

Madurai Street News - 08

தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைந்திருப்பதும் அங்கே கண்ணகி கோயில் ஒன்று இருப்பதும் பலருக் அறிவோம். ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் திருவிழாவில் இரு மாநிலங்களுக்கிடையே எழும் எல்லைப் பிரச்சனையால் பல தொல்லைகள் நேரிடுவதும் நமக்குத் தெரியும் ஆனால் கோவலன் கொலையுண்ட மதுரையிலே கண்ணகிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருப்பது.  எத்தனை பேருக்குத் தெரியும்?

செல்லத்தம்மன் கோயில் என்று இன்று அழைக்கப்படும் கோயிலே அன்று கண்ணகி கோயிலாக விளங்கி வந்தது. இக்கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்தியபடி நிற்கும் கண்ணகி சிலை இக்கோயிலில் காண்ப்படுகிறது. இக்காட்சி வேறெந்த கோயிலும் காணப்படாத ஒர் அம்சம் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். கற்புக்கரசி கண்ணகி இங்கே தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி (செல்லத்தம்மன்) கோயிலைச் சுற்றி ஆயர்குல மக்கள் வாழ்ந்து வருவதால் காவுந்தியடிகளிடமிருந்து கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதிரி இங்குதான் வாழ்ந்திருக்கக்கூடுமென டாக்டர் மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.

கோவலனும் கண்ணகியும் மாதிரியோடு தங்கியிருந்த பகுதியில் கண்ணகிக்குக் கோயில் எடுத்திருப்பது சாலப் பொருத்தமன்றோ? இக்கோயில் குலசேகரபாண்டியன் (1168-1175) திருப்பணியைக் கொண்டுள்ளது.

செல்லத்தம்மன் கோயில் ஆண்டுதோரும் ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபேறும் விசே­ம் குறிப்பிடத்தக்கது. அவ்விசே­ம் பின்வருமாறு: அந்நாளில் கருவுற்ற கறுப்பு நிற செம்மறியாடும் அதனுடைய மூன்று குட்டியும் கூரிய கத்தியால் குத்தபட்டு கோயிலைச் சுற்றி வலமாகக் கொண்டு வந்த பின்னர் கொல்லப்படுகின்றன. அப்போது பூசாரி சில சடங்குகளைச் செய்து அரிசியையும் காய்கறிகளையும் உயரத்தில் அள்ளி வீசுகிறார்.

அவற்றை வானோர்கள் உண்பதாக ஒரு ஐதீகம். அந்நாளில் கருவுற்ற பெண்களும், கன்னிப் பெண்களும்,புதிதாகத் திருமணமானர்களும் கோயிலுக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. இது பற்றி முன்னதாகவே முறைப்படி எச்சரிக்கை எசய்து விடுவார்கள். செல்லத்தம்மன் கோயில் அமைந்துள்ள தெரு இக்கோயில் பெயரால் செல்லத்தம்மன் கோயில் தெரு என்றழைக்கப்படுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

டி. தேவராஜ்

மதுரை எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கியமாக அறிய வேண்டிய நபர்களில் டி.தேவராஜ் அவர்களும் ஒருவர். மிகச் சிறந்த நூல்களை படைத்துள்ளார். மதுரை குறித்து பல நூல்களை வெளியிட்டிருந்தாலும், மதுரை நகர தெருப் பெயர்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள இவரது நூல் மதுரைக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த நூலின் தொகுப்பினைத்தான் நாம் இங்கு பார்க்கின்றோம். இவர் பசுமலை உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Back to top button
error: