ஆரோக்கியம்மருத்துவம்

செரிமானத்தை பாதிக்குமா மன அழுத்தம் ?

மன அழுத்தம் செரிமான மண்டலத்தில் காணப்படும் உறுப்புகளில் உள்ள நரம்புகளுக்கு போதுமான ரத்தத்தை வழங்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. இதனால் செரிமான உறுப்புகளின் நகர்வு பாதிக்கப்பட்டு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

மலச்சிக்கலுக்கான முதன்மை காரணம் மன அழுத்தம் ஆகும். நாள்பட்ட மலச்சிக்கல் மூலம், பிளவு என்று கூறப்படும் ஆசனவாய் வெடிப்பு போன்ற சிக்கல்களை உண்டு பண்ணலாம். வயிற்றில் உணவு நிறைந்து, செரிமான செயல்பாடுகள் மந்தம் அடையும்போது ஒருவித குமட்டல் ஏற்படலாம்.

அதே நேரத்தில் வயிற்றில் உணவு நிறைந்து மன அழுத்தமும் சேரும் பட்சத்தில் நரம்புகள் சரியாக செயல்படாமல் உணவுக்குழாய் சுழற்சி (Lower Esophageal Sphincter) திறந்த நிலை அடைந்து அதனால் நெஞ்செரிச்சல் என்று கூறப்படும் Acid Reflux ஏற்படலாம். வயிற்றுப்புண் போன்ற மருத்துவ பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் நேரிடையான காரணம் இல்லை என்றாலும்கூட அவை முன்பே இருக்குமானால் அதனை மோசமான நிலைக்கு கொண்டு போக மன அழுத்தம் காரணமாக இருக்கும்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

9 + 18 =

Related Articles

Close