செய்திகள்வேலை வாய்ப்பு

செக்கானூரணி மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் | 2ம் கட்ட மாணவர்‌ சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பங்களுக்கு அழைப்பு

Sekanurani Women's Vocational Training Centre Call for Applications for Phase 2 Admission Counseling

2022 ஆம்‌ ஆண்டில்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌, மதுரை, அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ (மகளிர்‌) மதுரை மற்றும்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌, செக்கானூரணி ஆகியவற்றில்‌ சேர்ந்திட இரண்டாம்‌ கட்ட மாணவர்‌ சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும்‌ முறை:

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்ய வேண்டும்‌. இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க மாணவ,
மாணவியர்களுக்கு உதவிடும்‌ வகையில்‌ மாநிலம்‌ முழுவதும்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ மற்றும்‌ மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகங்கள்‌ ஆகியவற்றில்‌ சேர்க்கை உதவி மையங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த விவரங்கள்‌ இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

எட்டாம்‌ வகுப்பு / பத்தாம்‌ வகுப்பு மற்றும்‌ அதற்கு மேலும்‌

தேர்ச்சி விண்ணப்பக்‌ கட்டணம்‌ :

விண்ணப்பக்கட்டணத்‌ தொகையான ரூ.50. விண்ணப்பதாரர்‌ Debit Card / Credit Card / Net Banking / G Pay வாயிலாக செலுத்தலாம்‌.

இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு துவங்கும்‌ நாள்‌ : 18.08.2022
இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய கடைசி நாள்‌ : 25.08.2022

மதிப்பெண்‌ அடிப்படையில்‌ நடைபெறும்‌ இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல்‌ மற்றும்‌ கலந்தாய்வு குறித்த விவரங்கள்‌ கடைசி தேதிக்கு பிறகு இதே இனையதளத்தில்‌ வெளியிடப்படும்‌.

மேலும்‌, தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில்‌ ஏதேனும்‌ சந்தேகம்‌ ஏற்படும்‌ நேர்வில்‌ கீழ்காணும்‌ மின்னஞ்சல்‌ முகவரியிலும்‌ அலைபேசி எண்ணிலும்‌ தொடர்பு கொள்ளலாம்‌

மின்னஞ்சல்‌ முகவரி: ricentremdu@gmail.com
தொடர்புக்கு : 9499055748.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: