செக்கானூரணி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நீட்டிப்பு

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், செக்கானூரணியில் 2020 ம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று முடிந்தது. மேலும் வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சிக்கான ஒரு சில இடங்கள் காலியாக இருப்பதால் நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) காலஅவகாசம் 16.1.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற விரும்புவோர் இந்நிலையத்திற்கு அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் சாதிசான்றிதழ் ஆகியவைகளுடன் நேரில் வந்து விண்ணப்பித்து சேர்க்கை செய்து கொள்ளலாம்.
இந்நிலையத்தில் பொருத்துநர், மின்சாரபணியாளர், கடைசலர் ஆகிய பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் மற்றும் உலோகத்தகடு வேலையாள். பற்றவைப்பவர் ஆகியபிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
எனவே பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளில் பெற்று வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பள்ளியில் பெற்று வராவிட்டாலும், பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சி காலத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதந்தோறும் ரூ.75) – ம், கட்டணமில்லா பேருந்து சலுகை விலையில்லா இரண்டு செட் சீருடை மற்றும் அதற்கான தையற்கூலி விலையில்லா காலணி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லாம டிக்கணினி, மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு (04549287224 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் கைபேசி எண் 9994871137 மற்றும் 8940061989 எண்ணில் தொடர்பு கொண்டு அறியவும். இத்தகவலை செக்கானூரணி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.