கலெக்டர்சுற்றுலாசெய்திகள்

சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு சுற்றுலா விருதுகள் | மதுரை கலெக்டர் தகவல்

Tourism Awards for Tourism Entrepreneurs in Tamil Nadu | Madurai Collector Information

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு சுற்றுலா விருதுகள் வழங்க உத்தேசித்துள்ளது.

சுற்றுலா தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் 1. சிறந்த உள்வரும் சுற்றுலா ஆபரேட்டர். 2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர். 3. சிறந்த பயண கூட்டாளர். 4. சிறந்த விமான கூட்டாளர். 5. சிறந்த தங்குமிடம். 6. சிறந்த உணவகம். 7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர்.

8. சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர் 9. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம் தளம் ஆபரேட்டர். 10.சிறந்த கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி ( MICE ) அமைப்பாளர் 11. சிறந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர். 12. சிறந்த சுற்றுலா வழிகாட்டி 13. தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம். 14. சிறந்த சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பரப் பொருள். 15. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுக்கு தகுதியான மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 02.09.2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: