செய்திகள்மாநகராட்சி

சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாமினை மேயர் துவக்கி வைத்தார்

The Mayor inaugurated an integrated special camp for differently-abled persons at Sundararajapuram Municipal Corporation Primary School.

மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் இன்று (08.08.2022) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களின் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அரசின் பல்வேறு துறைகள் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த 06.08.2022 அன்று மாநகராட்சி வார்டு எண். 21, 22, 56, 57, 58 ஆகிய பகுதிகளுக்கு ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று 08.08.2022 வார்டு எண்.59, 60, 61, 75, 76, 77 ஆகிய வார்டு பகுதிகளுக்கு சுந்தரராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் புதிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற வேண்டி 72 நபர்களும், அடையாள அட்டை புதுப்பிக்க வேண்டி 23 நபர்களும், தனித்துவ அடையாள அட்டை வேண்டி 50 நபர்களும், இணைப்புசக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 13 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற 10 நபர்களும், மத்திய கூட்டுறவு வங்கி உதவி வேண்டி 13 நபர்களும்.

மேலும், ஆவின் பாலகம் அமைக்க வேண்டி 8 நபர்களும், தனியார் வேலை வேண்டி 10 நபர்களும், இலவச பயிற்சி வகுப்பு வேண்டி 5 நபர்களும், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வேண்டி 2 நபர்களும், குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் வேண்டி 18 நபர்களும் என பல்வேறு உதவிகள் வேண்டி 122 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இம்முகாமில் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இன்று நடைபெற்ற முகாமில் 325 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 13.08.2022 (சனிக்;கிழமை) அன்று வார்டு எண்.50, 51, 52, 54, 55 ஆகிய பகுதியைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சிம்மக்கல் வடக்கு மாசி வீதி தருமை ஆதினம் சொக்கநாதர் திருமண மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், வருவாய்த்துறை, வேலை வாய்ப்புத் துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: