செய்திகள்

சிலம்பில் சீறும் மதுரை விராட்டிபத்து சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கௌரவிப்பு

Madurai News

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த கேரன் பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 10 வயதுள்ள ஜெ.அதீஸ்ராம் என்ற சிறுவனுக்கு 72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பாராட்டுச் சான்றும் வழங்கினார்.

இவ்விருதானது கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-15 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக வழங்கப்பட்டது.

கடந்த 17-19 நவம்பர் 2018ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்று தங்க பதக்கம் (1st Y.S.C.D.F National Games 2018-19) வென்றுள்ளார். இதேபோல் 2020 National Sports & Physical Fitness Board “International Sports Star Award” விருதை ஜெ.அதீஸ்ராம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: