கலெக்டர்கல்விசெய்திகள்

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

Central Government Scholarships for Minority Students are invited to apply

தமிழ்நாட்டில்‌ மைய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜைன மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மைய/ மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022 23ஆம்‌ கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்‌ தொகையும்/

மேலும், 11ஆம்‌ வகுப்பு முதல்‌ ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழக்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக்‌, செவிலியர்‌ / ஆசிரியர்‌ பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள்‌ உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்‌ தொகையும்‌ மற்றும்‌ தொழிற்கல்வி மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்‌ தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ (NSP) ஆன்லைன்‌ முலம்‌ வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ/மாணவிகள்‌ பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும்‌, பள்ளி மேற்படிப்பு மற்றும்‌ தகுதி மற்றும்‌ வருவாய்‌ அடிப்படையிலான கல்வி உதவித்‌ தொகைக்கு 31.10.2022 வரையிலும்‌ மேற்படி இணையதளத்தின்முலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இந்திய அரசின்‌ தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்‌ (NSP) இணையதளத்தில்‌ ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள்‌ தங்களின்‌ கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின்‌ (Nodal Officer) விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில்‌ சரிபார்க்க இயலும்‌, புதியதாக விண்ணப்பிக்கும்‌ மாணவ/மாணவிகள்‌ இணையதளத்தில்‌ எளிதாக விண்ணப்பிக்கும்‌ வகையில்‌ அனைத்து கல்வி நிலையங்களும்‌ தங்கசுடைய UDISE/AISHE/NCTV குறியீட்டு எண்ணை மாணவ/மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்‌.

இத்திட்டம்‌ தொடர்பான மைய அரசால்‌ வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்‌ http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: