செய்திகள்

சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு

Anti-drug awareness for schoolgirls of Simmakkal Kasthuribai Gandhi Corporation School

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் போதை மருந்துகள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் போதை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்ற பிறகு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி பேசினார்.

போதை மருந்துகளால் ஏற்படும் பாதிப்பை மாணவிகள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதோடு எதிர்காலத்தில் சிறப்பான இடத்தைப் அடையும்போது தொடர்ந்து பலருக்கும் இது குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் பள்ளியின் நூலகத்திற்கு உதவி தலைமை ஆசிரியை அவர்களிடம் போதை ஒழிப்பு குறித்து கவிஞர் திரு.இரா.ரவி எழுதிய தீண்டாதே தீயவை புத்தகம் வழங்கினார். ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: