சிமெண்ட் விலையேற்றம் எதிரொலி: அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு ஐகோர்ட் உத்தரவு
Cement pricing

சிமெண்ட் விலையேற்றம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிமெண்ட் விலையேற்றம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிளாஸ் ஒன் ஒப்பந்தக்காரர்கள் நலச்சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அதனைத்தொடர்ந்து சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிமென்ட் விலையேற்றம் குறித்து விசாரித்து ஜூன் 3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.