
கீரைத்துரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தானபோஸ். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெரு கண்ணன் காலனி சந்திப்பில் சென்றபோது சந்தேகப் படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து அவரிடம் சோதனை நடத்தினார். அப்போது போது அவர் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெரு செந்தில்குமார் மகன் பிரகாஷ்ராஜ் எந்த பிரகாஷ் 24 என்று தெரிய வந்தது. அவரை கைது செய்து எதற்காக எந்தத் திட்டத்தில் அவர் பதுங்கி இருந்தார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1