சினிமாவீடியோ

சிக்கலில் இருந்த கர்நாடக தண்ணீரை தனது விக்கல் மூலமாக திறந்துவிட்ட எம்ஜிஆர்

MGR / தமிழ் சினிமா 360 / Tamil Cinema 360

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து நாம் தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்கள் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைக்கு, கர்நாடாகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எம்ஜிஆர் செய்த சாதுர்யமான, அதே சமயத்தில் துணிச்சலாக செய்த காரியத்தைதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகின்றோம். இது நம் தலைவருக்கே உரிய தனி ஆளுமை என்று கூடச் சொல்லலாம். வாங்க வீடியோவுக்குள் போவாம்.

கர்நாடக அணையிலிருந்து தண்ணீைர திறந்துவிடும் பிரச்சனை இன்று நேற்று நடப்பது அல்ல, பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. ஏன் எதற்கு என்பது குறித்து சுருக்கமாக பார்ப்போம். காவிரி ஆற்று நீர்ப் பிரச்சனை என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இடையேலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும்.

காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

1991-ம் ஆண்டு டிசம்பரில் தென் கர்நாடக பகுதிகளில் தண்ணீர் திறப்பது குறித்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையை எதிர்த்து இந்த கலவரம் நடந்தது. தமிழர்கள் மீது தாக்குதல் ! இந்த கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், தென் கர்நாடக பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் தான்.

எல்லை பகுதியில் வாழ்ந்த மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். மாற்றி மாற்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஏறத்தாழ 17 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டன என இந்திய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருத்துள்ளது.

ஆனால் அங்குள்ள முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணை எனப்படும் கண்ணம்பாடி அணை நிறைந்துவிட்டால், வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும். ஏன் இதையும் அவர்களே வைத்துக் கொள்ளட்டும் என்று தமிழர்கள் விடாப்பிடியாக கூறினால் கர்நாடக நிலைமை என்னவாகும் என்று பலரும் கேள்வி எழுப்பாமல் இல்லை ?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்படி பல காலமாக இருந்து வரும் இடியாப்ப சிக்கலை தலைவர் எம்ஜிஆர் இடியாப்பம் சாப்பிட்டு முடித்து வைத்த விதமே தனி. MGR அவர்கள் முதல் அமைச்சராக இருந்து போது வழக்கம் போல் கர்நாடக தண்ணீர் தர மறுக்க, MGR அவர்கள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் அப்போதைய கர்நாடக முதல் அமைச்சர் திரு ராமகிருஷ்ணா ஹெக்டே வீட்டிற்கே சென்று விட்டார். MGR யை பார்த்த உடன் அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, அண்ணா வாங்கோ வாங்கோ என்று வணங்கி வரவேற்றார்.

அவர் மனைவியும் ஓடி வந்து அண்ணா வாங்கோ என்று வரவேற்று என்ன சாப்பிடுறிங்க அண்ணா என்று கேட்க, MGR ரும் இடியாப்பம் என்றார். உடனே இடியப்பம் அவித்து சூடாக அவருக்கு பரிமாற பட்டது. சாப்பிடும் போது தலைவருக்கு விக்கல் வர உடனே ஹெக்டே அவர்கள் ஒரு கிளாசில் தண்ணிர் ஊத்தி அதை குடிக்கும் படி சொல்ல, MGR அவர்கள் அதை குடிக்க மறுத்துவிட்டார்.

அண்ணா தண்ணீர் குடிங்கோ விக்கல் அதிகமாக இருக்கிறது என்று வற்புறுத்த அதற்கு MGR அவர்கள் “இந்த தண்ணீருக்காக தான் எங்கள் ஊரு மக்களும் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் இல்லாதபோது நான் மட்டும் இந்த தண்ணியை குடிக்கலாமா” என்றாராம்.

உடனே ஹெக்டே அவர்கள் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் படி தன் அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டாராம். எந்த ஒரு சண்டையும், கலவரமும் இல்லாமல் தன் ராஜதந்திரத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வந்தார் தலைவர்.

இப்படிப்பட்ட தலைவரை உலகம் உள்ளவரை கொண்டாடுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. நன்றி வேறு ஒரு புரட்சிதலைவர் தகவலுடன் உங்களை சந்திக்கின்றேன். உங்களிடமிருந்து விடை பெறுவது சினிமா ரசிகன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: