சர்வதேச யோகா தினம் சுங்கச்சாவடி ஊழியர்கள் பங்கேற்பு
International Yoga Day Customs staff participation

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள், நாள்தோறும் வாகன ஓட்டிகளிடம் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் நிலையில் 50க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது
உலக யோகா தினத்தை முன்னிட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் – க்கு, யோகா ஆசிரியர் ராமலிங்கசாமி, பல்வேறு யோகாசன கலையையும் அவர்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சச்சரவுகள் இன்றி செயல்படும் வண்ணம் அதற்கான யோக பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இப்பயிற்சியில் சுங்கச்சாவடி மேலாளர் ரவி பாபு, மற்றும் திட்ட இயக்குனர் அம்பட்டி சீனிவாசன், சுங்கச்சாவடி நிர்வாகிகள் முகேஷ், ராஜா, சங்கர் ,கண்ணன் உட்பட ஏராளமான ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.