
மதுரை மாவட்டம் சமயநல்லூர்- சோழவந்தான் செல்லும் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் வைக்கப்படும் தீ புகைமண்டலமாக அப்பகுதி முழுவதும் காட்சி அளிப்பதோடு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.குப்பைகளுக்கு அருகில் ரயில்வே இருப்பு பாதை செல்கிறது.
சாலையோரம் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதோடு நோய் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படும் நிலைஅபாயமும் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் சாலை வேலைகளில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1