செய்திகள்விபத்து

சமயநல்லூர் அருகே அடுத்தடுத்து நடந்த தீ விபத்தில் ஒருவர் பலி

One person died in a fire accident near Samayanallur

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். வேன் தீப்பிடித்து எறிந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள் புரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் சிபிராஜ் (வயது 19) இவர் மோட்டார் சைக்கிளில் அதிகாலை 5.45 மணிக்கு மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சமயநல்லூர் அருகே கட்டபுலிநகர் முன்பாக சாலையை கடக்க முயன்ற சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (59) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது இதில் சுந்தரராஜன் சம்பவ இடத்தில் பலியானார்.

அப்போது கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி ஈச்சர் வேன் வந்தது அந்த வேனினைஉசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி (40) என்பவர் ஓட்டி வந்தார். அந்த வேன் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதிய உடன் தீப்பிடித்து எரிந்தது.

அந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் மளமள என்று எரிந்ததால் மோட்டார் சைக்கிள் வேன் முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயை அணைத்தனர். அடுத்தடுத்து நடந்த தொடர் விபத்து சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: