சக்குடியி ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் விழா
Shakudii Sri Mupuli Swamy Temple Kumbabhishekam Ceremony

மதுரை மாவட்டம் சக்குடியில் உள்ள ஸ்ரீ முப்புலி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆக.,28ம் தேதி விக்னேஷ்வர பூஜை, தீர்த்த அலங்காரத்துடன் துவங்கியது.
தொடர்ந்து காலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், காயத்திரி ஹோமம் நடந்தது. ஆக.,29ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும், ஆக.,30ம் தேதி 4, 5ம் கால பூஜையும், நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு கும்ப பூஜை முடிந்து வேதமந்திரங்கள், மேள, தாளம் முழங்க புனித நீர் உள்ள கும்பங்கள் புறப்பாடு நடந்தது.
காலை 9.20 மணிக்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவரும், பி.ஆர்.கிரானைட்ஸ் உரிமையாளருமான பி.ராஜசேகரன் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து முப்புலி சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயனன், மாவட்ட தலைவர் பழனி, துணை செயலாளர் பழனிவேல், செயற்குழு உறுப்பினர் வீராசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.