செய்திகள்
கோ.புதூரிலிருந்து அழகர்கோவில் செல்லக்கூடிய பிரதான சாலையில் திடீர் பள்ளம்
Sudden pothole on the main road leading to Alagharkoil from Ko.Pudur

மதுரை கோ.புதூரிலிருந்து அழகர்கோவில் செல்லக்கூடிய பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினர் பள்ளம் விழுந்த பகுதியில் தடுப்புகளை அமைத்து வாகனம் ஏதும் செல்லாத வகையில் போக்குவரத்தை மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளம் எதனால் விழுந்தது எனவும் ? இது குறித்து மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பள்ளத்தை சீர் செய்யும் பணியை ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிகமாக இந்த பகுதியில் போக்குவரத்துஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வருகிறது. வாகனங்கள் அதிகம் சென்று வரும் பகுதியில் திடீர் பள்ளம் விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1