
கோவையில் இருந்து மதுரை நோக்கி சுமார் 55 பயணிகளுடன் நேற்று இரவு 11..15 மணியளவில் அரசு பேருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்து திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் போட்டி வந்துள்ளார் நடத்துனர் பழனி முருகன் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரை பறவை செக்போஸ்ட் அருகே வரும்பொழுது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தடுப்பின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமுற்ற ஆறு பயணிகள் 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1