செய்திகள்

கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி | மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Madurai iCourt order

ஆபாச பேச்சு, நடனங்கள் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனையுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆடல், பாடல் நிகழ்ச்சி தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடக்கின்றன. இந்த திருவிழாக்களில் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாலும், கொரோனா தொற்று பரவியதாலும் ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று நடைமுறைகள் தளர்த்தப்பட்ட போதும் ஆடல்- பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை.

பல்வேறு வழக்குகள்இதனால் கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி தர கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

குறிப்பாக ஆடல்-பாடல் நிகழ்ச்சியை இரவு 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்து கொள்ள வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: