
கோரிப்பாளையம் சம்புரோபுரம் மார்க்கெட்டில் பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தல்லாகுளம் போலீசார் கோரிப்பாளையம் சம்புரோபுரம் மார்க்கெட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக் உடன் சந்தேகப்படும் படியாக நின்ற 3 வாலியர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பைக்கையும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பைக்கில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்த போது அவர்கள், பைக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில், கோரிப்பாளையம் சம்புரோபுரம் மார்க்கெட்டைச் சேர்ந்த இளங்கோ மகன் கிஷோர் 20, தெற்குவாசல் எப்.எப். ரோட்டைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் மணிகண்டன் 19 , தெற்குவாசல் செட்டி ஊரணி சந்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ்குமார் 19 என்று தெரியவந்தது.
அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றரைகால் கிலோ கஞ்சா வைத்திருந்த பைக் மற்றும் செல் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.