வரலாறு

கோன் வம்சத்து கும்மிப்பாடல் !

Kummi Padal - Konaar Vamsam

இந்திய விடுதலை போரின் முதல் விடுதலை வீரர் கட்டாலங்குளம் மன்னர் வீரஅழகுமுத்துக்கோன்(1728 -18.11.1757) அவர்களுடைய மூதாதையர் அரசர் அழகப்பக்கோன்(1517-1537) அவர்களை பற்றிய கும்மிப்பாடல்”

கட்டாலங்குளம் கோட்டையில் ஏட்டுச் சுவடிகளில் இருந்த கும்மிப் பாடலை மன்னர் அழகுமுத்துக்கோன் வாரிசுதாராகிய கடைசி மன்னர் அழகுமுத்துகாசிச்சாமி சேர்வைக்காரர்கோனார் அவர்கள் எழுதிக் கொடுத்த வரலாற்றுக் குறிப்பும் கும்மி பாடல்களும்

ஆலங்குளம் சீமையில் ஆயர்குல அரசன் அழகப்பக்கோன்,சின்ன அழகப்பக்கோன் கோட்டை நிர்ணயித்து குடியேறியது மற்றும் அவர்களது கொடைதன்மை,ஆட்சி,புகழ்,ஆயர்களின் வீரம் போன்றவற்றை இந்த கும்மி பாடல் தெளிவுபடுத்துகிறது

” சீர்கொண்ட ஆதியைத் தெய்வநாயகமதை

தெளிவுரச் சிந்ததை மீதில்

திரமதாய் வைத்தரசு உலகினில் வாழ்கவே

செம்பொன் கிரீடம் வைத்து

பெருமார்பு தன்னியே பருமுத்து மாலையும்

சிறுநாகம் ரத்னம் மின்ன

திக் செங்கு மேமகிழ மிக்க வைடூரியம்

சிவமணி மாலை மின்ன

பார்கொண்ட இருகரம் தன்னில் வைடூரியம்

பாசுபந் தணிந்த ரத்னம்

பதித்த மணி வைரமும் கணையாளி மோதிரமும்

பன்பாய் அணிந்த விரல்கள்

பச்சைமணி வடமது கச்சையும் கட்டியே

பட்டாடை தொங்கவிட்டு

படைமுகத் தெதிராளி துடிதுடிப் பாகவே

பயங்கர மடைந்து ஓட

பதினெண் ஆயரும் ரணவீர பத்திரன் போல்

பாங்காய் வரிந்து கட்டி

பவளரத்தினம் வைரமும் இழைத்திலகு

பட்ட அரை ஞான மிட்டு

பாதமிரு காலிலே வீரமணி ஓசையும்

பாப்பரசு தானு மின்ன

நேர்கொண்ட சத்ராதி அரசரை வெல்லவே

நெடியதொரு வேல் பிடித்து

நிபிடிகத்துடன் ரத கஜதூரிக பாதாதியை

நேர் அணி பிரித்து விட்டு

நீதி பெரும் மன்னர் கோன் மக்கள்

நிலைகின்ற கீர்த்தி மன்னா

நேசமிகு மாப்பிளைக்கோன் மக்கள்

ராணுவம் நீலகிரிபோல் மிகுந்து

நெடிய மகமேருபோல் அழகு சிம்மாசனம்

நிலமணி ரத்னம் மின்ன

நிலையிட்ட கண்ணாடி வைரமணி மாலையும்

நித்தில நவரத்ன மின்ன

நீங்காத பரிவார சேனையும் கொடிவிருது

நெடு வானமுகடு முட்ட

நிகழ்கால மொழி சொல்லும் மந்திரிபிரதானிகள்

நீதிமுறை யோதி நிற்க

பார்கொண்ட ரெகுநாதன் அரிகிருஷ்ணன்

அருள்பெற்ற கலைஞான தேவநீதன்

கருமேவும் நகராவும் இடியேறு போலவே

கடலொளி போல் முழங்க

கட்டியங்காரன் பராக்கப்பராக் கென்று

கட்டியங் கூறி நிற்க

கட்டியங்காரன்ப பராக்குப் பராக் கென்று

கட்டிய நும் கூறி நிற்க

மத்தளம் தம்பூரு ரண போரிகை சப்தம்

கடகடவென தடதடவென முழங்க

கண்டலாங்குளிர்கருக்கு அரசரெனவே

கவிவானருக்கு தந்த மன்னா

கவலையைத் தரசுபுரி அழகு முத்தேந்திரா

கர்ணனென வந்த கோனே

கனகமணி மேடையில் கொலுவிருந்தரசுபுரி

கார் என வந்த துரையே

கவரி வெண்சாமரமும் நளநாட பல்லிகள்

காளஞ்சி ஏந்தி நிற்க

பாங்கான சமுதாடு ஈட்டியும் கத்தியும்

படுதாலையும் வாளும் மின்ன”

ஓலைச்சுவடியில் எழுதியவர் ராமசாமிஅய்யர்

அரசர் அழகப்பக்கோன் ஆட்சி பகுதியில் இருந்த அனைத்து நிலங்களிலும் நாற்று நடும் பொழுதும்,கோயில்திருவிழாக்களிலும் மன்னர் அழகுமுத்துக்கோன் பற்றிய கும்மிப்பாடல்கள் பாடப்பட்டது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: