செய்திகள்போலீஸ்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

The wanted accused in the murder case was arrested after 11 years

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ,ஆஸ்டின்பட்டி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வம் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக, ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தனர் .
அதில் 2-வது குற்றவாளியாக கருதப்படும் மதுரை சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த பொன்னாங்கன் (வயது 43) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் ,போலீசிடம் சிக்காமல் தலை மறைவாகிவிட்டார். ஆனாலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பொன்னாங்கன் மதுரையில் உள்ள தனது உறவினர்களை பார்க்க வந்திருப்பதாக ஆஸ்டின்பட்டி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சுற்றி வளைத்து பொன்னாங்கனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொன்னாங்கனிடம் 2011 ஆம் ஆண்டு நடந்த வெற்றி செல்வம் கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை வழக்கில் தேடப்பட்டவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் பிடியில் சிக்கி உள்ளது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: