
மதுரை கே.புதூர் மண்மலை மெயின் ரோட்டில் மண்மலை கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி சிலை வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் அதிகாலை பூஜை செய்ய சென்றபோது கோயிலில் வைக்கப்பட்டிருந்த மீனாட்சி சிலையை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி மணிகண்டன் கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிலை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1