
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்வது திற்பரப்பு அருவி ஆகும். இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்eது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோதையாற்றில் தவழ்ந்து திற்பரப்பு பகுதியில் வந்தடையும் இந்த அருவியை குமரி குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர் வீழ்ச்சி 300 அடி நீளத்துடன் முற்றிலும் பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகையுடன் கொண்டவையாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் வருடத்தில் 7 மாதம் அதிக அeவு நீருடன் சீற்றத்துடன் காணப்படும். நீர்வீழ்ச்சியின் கீழ்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக குளியல் இடம் அமைந்துள்ளது. திற்பரப்பு அணை கோதையாறு திட்டத்தின் கீழ் 1951-இல் திற்பரப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாயும் இவை அடர்ந்த வனப் பகுதிகளிலிருந்து வருவதால் அதிக மூலிகை குணம் கொண்டவையாகவும் இந்த அருவி பார்க்கப்படுகிறது.
இந்த நீர் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும் உள்eது. படகு சவாரியும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீர்வீழ்ச்சிக்கும் நீர்த்தேக்கத்திற்கும் நடுவே மகாதேவர் கோவில் உள்eது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. பார்வையாeர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இந்தக் கோவிலின் கட்டிடக்கலை முற்றிலும் கேரள பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திற்பரப்பு அருவியின் இரு புறங்களையும் இணைக்க வலுவான பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அருவியில் நீராடி விட்டு அருகில் இயற்கையும் தெய்வீகமும் வசீகரித்துக் கொள்ளவும். மகாதேவர் ஆலயம் சென்று வழிபடுவது இங்கு வரும்பக்தர்கள் கடைபிடிக்கும் மரபாக உள்ளது. இங்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்e இந்த அருவி நாகர்கோவிலில் இருந்து 35 கி.மீ., தூரத்திலும், திருவனந்தபுரத்தில் இருந்து 55 கி.மீ தூரத்திலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இயற்றை எழில் சூழ்ந்த திற்பரப்பு பகுதி, அருவியும் ஆலயமும் ஒன்று கூடிய இடம். பச்சை மலையும் கோதையாறும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த சுற்றுலா தலத்துக்கு நாமும் ஒரு விசிட் அடிப்போம்.
வீடியோவாக பார்க்கலாம் வாங்க