
தேனி மாவட்டம் பெரியகுளத்துல இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவுல தாங்க இந்த அருவி இருக்கு. மேற்கு மலைத் தொடர்ச்சியில இருக்குறதால இந்தப் பகுதி வனத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்குங்க. அருவிக்கு கொஞ்ச தூரம் ரம்மியமான இயற்கை சூழல்ல நடந்து போகணும். வழுக்குப்பாறைகள் நிறையா இருக்குற இடம்ன்றனால கவனமா நடந்து போகணும். முக்கியமா குழந்தைகள கவனமா கூட்டிட்டுப் போகணும்.
கொடைக்கானல் மலையில உருவாகுற நீரூற்று மலையடிவாரத்தில உள்ள கும்பகரையை வந்து சேருது. இந்தப் பகுதிக்கு கும்பக்கரைன்னு ஏன் பேர் வந்தது அப்படின்னு பாத்தோம்னா மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி போன்ற வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடும்னும், அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைச்சதாகவும், இந்த கும்பல்கரையே இப்போ காலப்போக்கில கும்பக்கரை அப்படின்னு மாறிடுச்சுன்னு சொல்றாங்க.
அருவி பகுதியில இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்கள்ல வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம்னு சொல்ற பகுதிகள்லயும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கிறாங்க. அது மட்டுமில்லாம இந்த அருவி பகுதியில சில இடங்கள்ல குளிக்கிறது ஆபத்து என தடையும் விதிச்சிச்சிறுக்காங்க. வருசம் ஃபுல்லா இந்த அருவில தண்ணி வத்தாம இருக்குறது ரொம்ப சிறப்பான விசயம் தான்.
ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த ஏரியா வனத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்குறதால காலையில 9.00 மணில இருந்து மாலை 5.00 மணி வரை மட்டும் தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தர்ராங்க. பிக்னிக் பிளான் பண்றவங்க இதை மனசில வச்சுக்குங்க. இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த அருவிய சுற்றிலும் பச்கை பசேல் என மரங்களும், பறவைகளோட சப்தமும், மூலிகை வாசமும் நம்ம மனசுக்கு ரொம்ப இதமாகவும்கண்ணுக்கு ரொம்பவும் குளிர்ச்சியாவும் இருக்கு.
அது மட்டுமல்லிங்க இந்த அருவிய சுத்தி, பாண்டி மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக நிறைஞ்சிருக்குறதால, இந்த அருவில குளிச்சா வாதநோய் வராதுனு இந்த ஏரியால இருக்கற சில பெரிசுங்க விலாவாரியா பேசிக்கிட்டிருக்கறதையும் கேட்கலாம். லாக்டவுன் முடிஞ்சதுக்கப்புறம் ஃபிரெஷ்ஷா ஒரு குளியல் போட்டு வந்தோம்னா உடம்பும் மனசும் ஜில்லுன்னு மாறிடும். புதுசா ஒரு டூர் பிளானோட அடுத்த மீட் பண்ணுவோம்….