
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் விரிவாக்க பகுதிகளான கிரீன் கார்டன், வலையதெரூ அஷ்டலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் வரன்முறையை மீறி புதிதாக விவசாய நிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் வலையதெரு அருகில் புதிதாக வீட்டடி மனை உருவாக்கப்பட்டது. இந்த வீட்டடி மனைக்கு அனுமதி வழங்க கீழமாத்தூர் ஊராட்சி மன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதற்கு அந்த பிளாட்க்கு நடுவில் கால்வாய் செல்வதாக கூறி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் ரூ.20 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது.
அதன் பிறகு அந்த பேரம் முடிவடையாத காரணத்தால், அந்த உறுப்பினர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கால்வாயையை தூர்வார தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேறியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் உட்பட பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ள நிலையில், கால்வாய் தூர்வாரும் பணி மட்டும் அவசர கதியில் பிளாட் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் பிளாட் உரிமையாளரிடம் பேசிய பேரம் நிறைவடைந்து ரூ.10 லட்சம் பணம் கைமாறியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் கண் துடைப்பிற்காக உண்மையில் நீர் வரத்து கால்வாய் உள்ள பகுதியை விட்டுவிட்டு தேவையில்லாத இடங்களில் அதுவும் வீட்டடி மனைக்கு நடுவே,கால்வாய் தோண்டுவதாக கூறி ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணி துறையுனருடன் இணைந்து, வீட்டு உரிமையாளர்களிடம் மறைமுகமாக பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், ஜேசிபி இயந்திரம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிளாட் போடப்பட்ட வீட்டடி மனைக்குள் புகுந்து கற்களை சேதப்படுத்துதல் மற்றும் மரங்களை பிடுங்கி வருதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இதை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை உயரதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து, தடுத்து நிறுத்தி, முறையாக அளவீடு செய்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.