ஆன்மீகம்செய்திகள்

கீழமாத்தூரில் 100 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா | ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Ayyanar temple excavation ceremony held after 100 years in Keelamathur

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் அருள்மிகு ஸ்ரீ செவிடு தீர்த்த அய்யனார் திருக்கோவில் புரவி எடுப்பு திருவிழா நூறு ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது.

விழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை செல்வ விநாயகர் திருக்கோவில் கணபதி ஹோமம் நடைபெற்ற பக்தர்கள் காப்பு கட்டுதல் தொடங்கி விரதம் இருந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்த கால் நடப்பட்டது தொடர்ந்து முனியாண்டி கோவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஸ்ரீ மந்தை காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ செவிடு தீர்த்த அய்யனார் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.

தெருவெங்கும் அதிர்வேட்டு வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளில் ஸ்ரீ ஐயனார் ஸ்ரீ கருப்பசாமி குதிரை வாகனம் வலம் வந்தது.

அப்போது பெண்கள் வீட்டின் முன்பாக தீபமேற்றி சாமிக்கு படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து செல்வ விநாயகர் ஆலயத்தில் வாகனம் நிலைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் கீழமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் துரைப்பாண்டியன் இம்தியாஸ் அம்மா மகன் ஜெயக்குமார் கிருஷ்ணன் பாலாஜி விவேக் மற்றும் விழா கமிட்டியினர் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

அம்மச்சியார் அம்மனுக்கு ஆராதனை நடைபெற்று இன்று காலை சக்தி கிடா வெட்டுதல் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழமாத்தூர் கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: