
தைப்பதற்கு கொடுத்த துணியை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்து வாடிக்கையாளரை சுத்தியலால் தாக்கிய டெய்லரை போலீசார் கைது செய்தனர்.
கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா 42. இவர் கிருதுமால் நதி ரோட்டில் டெய்லர் கடை வைத்துள்ள ஜான் தங்கவேல் என்பவரிடம் துணிகளை தைக்க கொடுத்துள்ளார். அந்த துணிகளை வாங்க சென்றபோது இன்னும் தைக்கவில்லை என்று டெய்லர் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த டெய்லர் ஜான் தங்கவேல் சுத்தியலால் வாடிக்கையாளர் முத்தையாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரில், தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்கிய டெய்லரை கைது செய்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1