
மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 முடிய ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அறிவிக்கையின்படி, மதுரை மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தற்செயல் தேர்தல் 09.07.2022 தேதியன்று வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், இதில் வாக்காளர் எவரேனும் 98.4′ F மேல் காய்ச்சல் மற்றும் கோவிட் உள்ளவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்.
மேலும், 12.07.2022 தேதியன்று தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைபெறும் விபரம், ர திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவரிமான் ஊராட்சி:
மற்றும் 4வது வார்டு உறுப்பினர் 2) கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவளவு ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் 3) தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லமரம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் 4) செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி 6வது வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிக்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நுண்பார்வையாளர் மூலம் கண்காணிக்கப்படும். மேலும், சிசிடிவி, விடியோ மூலம் தேர்தல் தொடர்பான அனைத்தும் பதிவுகளும் மேற்கொள்ளப்படும். மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மரு. அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.