நாய்பெட்ஸ்வீடியோ

காவலுக்கு சிறந்தது சிப்பிப்பாறை நாய் | குட்டி ரூ.8000 | வேட்டை நாய் | நாட்டு நாய்

Vettai Naai | Native Dog | Sippipaarai Dog | madurai | Samaiyanaloor

#வேட்டைநாய் #சிப்பிப்பாறை #நாட்டுநாய்

பயண அனுபவம்

வேறு ஒரு யூடுப் சேனலை பார்த்து, அழைப்பு விடுத்தவுடன் திரு.அஜீத் அவர்கள் பேட்டிக்கு சம்மதம் தெரித்தார். பறவைக்கு அடுத்தபடியாக உள்ள சமயநல்லூரில், அதாவது மதுரை டூ திண்டுக்கல் செல்லும் நான்கு வழி சாலையில் வந்தால் இவரது பண்ணையை மிக எளிமையாக அடைந்துவிடலாம். நான் அப்படித்தான் வந்தேன்.

இவருடைய தாத்தா வேட்டை நாய்கள் வளர்த்திருப்பதாகவும், இவர் தனது இளமை வயதில் வெளிநாட்டு நாய்கள் பல வளர்த்த அனுபவம் உள்ளதாகவும், தற்போது லாக்டவுன் காலத்தில் மீண்டும் வேட்டை நாய் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

பண்ணையில் இரண்டு ஆண் மற்றும் பெண் வேட்டை நாய்கள் இருந்தன. எனக்கு அதில் ஒரு பெண் நாய் மிகவும் பிடித்து போனது. உயரம் குறைவாக இருந்தாலும் அதன் கட்டுமஸ்தான உடம்பு என்னை கவர்ந்து இழுத்தது. அது எந்த நாய் என்பதை வீடியோவில் நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

அஜீத் அவர்கள் பார்ப்பதற்குதான் பாகுபலி போல் தெரிந்தாலும், சகஜமான மனிதர்தான். அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பது கூடுதல் தகவல். தோற்றத்தை வைத்து யாரையும் நாம் எடைபோட்டுவிடக் கூடாது. அப்படித்தான் அஜீத் அவர்களும்.

எனக்கு அப்படி தெரியும், வேட்டை நாய்கள் பற்றி இப்படி தெரியும் என்று வார்த்தைகளை கொட்டவில்லை. எனக்கு இதில் அனுபவம் மிக குறைவு என்றபோதும், எனக்கும் எனது மகனுக்கும் இதில் ஆவர்வம் அதிகம் என்பதால், கற்றுக் கொண்டு வருகின்றோம். நம்பிக்கையாக நாய் குட்டிகள் விற்கின்றோம் என்றார் நம்மிடம்.

பேட்டிக்கு முன்னதாக வீட்டிலிருந்து தேனீர் கிடைத்தது. அதன் பிறகு ஒவ்வொரு நாயையும் காட்சிபடுத்தினேன். அஜீத் அவர்களின் மூத்த மகன்தான் மிகுந்த ஆர்வத்துடன், அப்பா எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டிருந்தார். என்னோடும் சற்று நேரத்தில் ஒட்டிக் கொண்டார்.

கடைசியாக அங்கிருந்து கிளம்பும்போது, அண்ணே நாய் மட்டும்தான் எடுப்பீங்களா ? பறவைகள் மற்றது எல்லாம் எடுப்பீங்களா என்று கேட்டார். நாங்க பறக்குறது, தாவுறது, ஓடுறது, நீந்துறது, மிதக்குறது னு எல்லாமே எடுப்போம் தம்பி என்றதும், ஒரு பொன் சிரிப்பு. அது வேறு ஒன்றுமில்லை. அவருடைய நண்பர்கள் செல்லப்பிராணிகள் வளர்க்கிறார்கள். அதை காட்சிபடுத்த வேண்டும் என்ற ஆவல்.

நிச்சயமாக அதையும் காட்சிபடுத்துவோம் என்ற நம்பிக்கை இந்த வீடியோவை பார்த்த பிறகு அவருக்கு ஏற்படும். முக்கியமாக உயரமான நாய்கள் வேண்டும் என்பவர்கள் இவரது பண்ணையை தவிர்ப்பது நல்லது. வேறு ஒரு பயணத்தில் நாம் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: