
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 47 வயதுக்கு மிகாமால் உள்ள முன்னாள் இராணுவத்தினர்கள், இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பணியில் உள்ள இராணுவத்தினர் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 07.07.2022 முதல் 15.08.2022-க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனீஷ் சேகர், தெரிவிக்கிறார்.