காரியாபட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
Lunch was provided to the cleaning staff on behalf of the Kariyapatti Vijay People's Movement

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கொரோனா ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவர்கள் உள்ள அனைத்து தெருகளையும் தினந்தோறும் சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கும் காரியாபட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காரியாபட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் வெயிலுமுத்து, துணைத் தலைவர் சுகந்த் தலைமையில் அருப்புக்கோட்டை நகர தலைவர் ராமராஜன், காரியாபட்டி நகரத் தலைவர் விஜய், காரியாபட்டி ஒன்றிய தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலையில் காரியாபட்டி நகர துணைத் தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் அஜித்குமார்.
மற்றும் நகர பொருளாளர் ஆதி(எ) நாகராஜ், காரியாபட்டி எஸ்.பி.எம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், எஸ்.பி.எம் மருத்துவமனை டாக்டர்.ஹரிஷ் மற்றும் காரியாபட்டி நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார்கள்.
காரியாபட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உணவு வழங்கிய சில புகைப்படங்கள்