குற்றம்செய்திகள்

காமராஜர் சாலையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Youth committed suicide by hanging on Kamaraj road

மதுரை காமராஜபுரத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் தெற்குதரவையை சேர்ந்தவர் வீரபாண்டி மகன் மணிகண்டன் 23. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலை வடக்கு தெருவில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய அப்பா வீரபாண்டி இது குறித்து கீரைத்துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: