காமராசபுரம், பாலரங்கபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பு | ஆறாக ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
Common underground sewer blockage in Kamarasapuram, Palarangapuram | Public suffering due to waste water flowing into the river

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்க்கு உட்பட்ட காமராசபுரம், பாலரங்கபுரம் மற்றும் கீழ் மதுரை ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
நெருக்கடிமிகுந்த பகுதிகளில் வீடுகள் அதிகம் இருப்பதனால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பாதாள சாக்கடை மூலம் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் தெற்கு மண்டல அதிகாரிகளிடம் முறையிடும் போது அவ்வப்போது மட்டுமே கழிவு நீர் அப்புறபடுத்தும், வாகனம் மூலம் தற்காலிகமாக தீர்வு செய்து வருகின்றனர்.
மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஒடி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே, பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படாமல் இருக்க, பாதாள சாக்கடைகளை புனரமைக்கவோ அல்லது ஆழப்படுத்தி அமைக்கவும், கூடுதல் பாதாள சாக்கடைகளை அமைத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
எனேவ, மாநகராட்சி உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பாதாளச் சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு கண்டால், நிம்மதியாக சாலையில் பெதுமக்கள் பயணிக்கலாம்.