
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அணிகா பிரேசில் 01.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்ற 24வது கோடை கால காது கேளாதோருக்கான (24th SUMMER DEAFLYMPICS – BRAZIL) ஒலிம்பிக் இறகுப் பந்து போட்டியில் ஒற்றையர், கலப்பு இரட்டையர் மற்றும் குழுப்போட்டியில் ஆகிய மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி இறகுப்பந்து வீராங்கனை செல்வி.ஜெர்லின் அணிகா அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ்சேகர் 18.05.2022 அன்று நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த பாராட்டு சந்திப்பில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் உடனிருந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1