கலெக்டர்செய்திகள்புகார்

காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு | மதுரை கோட்டாச்சியரை கண்டித்து கலெக்டரிடம் மனு

Kattunayakkan caste certificate is not given to the people of the community Petition to Collector condemning Madurai Kotachiar

மதுரை மாவட்டத்தில், உள்ள மதுரை கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்ககூடிய காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால், விண்ணப்பித்த காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த ஏராளமானோருக்கு உரிய சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

மேலும், பெற்றோர்களுக்கான சாதி சான்றிதழ்கள் இருந்தும் கூட, குழந்தைகளுக்கு உரிய சாதி சான்றிதழை வழங்காமல் கோட்டாச்சியர் இழுத்தடிப்பதாக கூறி, காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய மற்ற கோட்டாச்சியர் உடனுக்குடன் சாதி சான்றிதழை வழங்கும் நிலையில், மதுரை கோட்டாச்சியர் மட்டும் சாதி சான்றிழ் வழங்காமல், இழுத்தடிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, பழங்குடியின ஆணைய தலைவரிடம் புகார் அளித்த நிலையிலும் கூட, கோட்டாச்சியர் சாதி்சான்றி்தழ் வழங்கவில்லை எனவும், இதன் காரணமாக பல்வேறு மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட, காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: