
மதுரையில் வாடகை வீடுகளில் குடியிருப்போர்களுக்குத்தான் பல தெருக்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும். ஏனெனில் தங்கள் வாழ்நாளில் பல்வேறு தெருக்களில் குடியேற நேரிடும். அவர்களுக்கு ஒவ்வொரு தெருவும் ஒரு உறவு போன்றது. அந்த தெருக்களில் அவர்கள் வாழ்ந்த காலங்களை எப்பொழுதும் மறப்பதில்லை.
இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால், அந்த தெரு வழியாக கடந்து சென்று பலரும் தங்கள் பழைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்வதுண்டு. வாழ்க்கை என்பதே நினைவுகளை அசைபோடுவதுதானே. சரி, விசயத்திற்கு வருகின்றேன், இந்த முறை நாம் பார்க்கப்போகும் தெருவும் வெறும் ஞாபகங்களை மட்டுமல்ல வரலாற்றையும் நினைவுபடுத்தக் கூடியது. ஆம்… மதுரை மக்கள் அனைவரும் அறிந்த காமிமார் பள்ளி வாசல் பற்றியும், காமாத் தெரு பற்றியும் பார்க்கப்போகின்றோம்.
மதுரையில் தில்லி சுல்தான்களின் ஆட்சி 44 ஆண்டுகள் நடைபெற்றன. 1335 முதல் 1378 வரை எட்டு சுல்தான்கள் ஆட்சி செலுத்தினர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் காதி அல்காதி என்போர் முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தனர். 1கியாசுதீன் தமகான்ஷா(1340-1342) வுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த நசீரூதீன் (1342-1356) சுல்தானாக பதவியேற்கும்போது யாவருக்கும் வெகுமதி வழங்கினார். அப்போது சத்ருஸ்ஜமான் என்பவருக்கும் முதலில் பரிசு பெற்ற வாஜிர் எழுந்து இருநூறு தினார் பணம் பரிசு பெற்றார்1 என குறிப்பு கூறுகிறது.
மேலும் தில்லி சுல்தான்கள் அரசவையைப்போலவே நசரூதீன் அவையிலும் அரசு உயர் அதிகாரிகள் அங்கம் வகித்தனர். தலைமைக்காதி மற்றும் சதர் பதவிகள் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு சத்ருஸ் ஜம்மான் எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டது என்றும் மற்றொறு குறிப்பு கூறுகிறது. மதுரையில் சுல்தான்கள் ஆட்சியில் சமய உயர் பொறுப்பு வகித்த காதி அல்லது காஜி வாழ்ந்த தெரு காஜிமார் தெரு என்றழைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பெயரே நிலைத்தது.
தாஜூதீன் என்னும் இஸ்லாமியப் பெரியார் ஒருவர் மாறவர்மன் குலசேகரன் மன்னன் காலத்தில் 1268-1310) இஸ்லாமிய சமயக் கருத்துக்களைப் பரப்ப மதுரைக்கு வந்தார் இப்பெரியாருக்குப் பாண்டிய மன்னன் இன்றைய காஜிமார் தெருவில் ஒரு அரண்மனையை நன்கொடையாக வழங்கினார்.
அதன் பராமரிப்புக்கு விரகனூர் கிராமத்தைத் தானமாகவும் கொடுத்தார். இப்பெரியார் வழிவந்தவர்களே காஜியாகவும் இன்று மதுரை மாவட்டத் தலைமை காஜியராகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பெரியார் தாஜூதீன் வாழ்ந்த தெருவில் கட்டப்பட்ட மசூதி காஜிமார் மசூதி என்றழைக்கப்பட்டது.
காஜிமார் பள்ளிவாசல்தான் மதுரையில் உள்ள பழமையான பள்ளிவாசல். இது 14ஆம் நூற்றாண்டில் சுல்தான்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்பர். காஜிமார் பள்ளிவாசல் தெரு, பள்ளிவாசல் சந்து, காஜிமார் சந்து,காஜிமார் தோப்பு சந்து என அழைக்கப்படும் தெருப் பெயர்கள் அனைத்தும் காஜிமார் பள்ளிவாசலையும் காஜிமார் பெருமையையும் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த தெருவோடு இன்னொரு தெருவைçயும் சேர்த்தே சொல்லியாக வேண்டும். அதுதான் காமாத் தெரு. கூடல் அழகர் பெருமாள் கோயிலருகே அமைந்துள்ள காமாத் தெருவில் கட்டப்பட்டுள்ள மசூதி மிகப் பழமையானது இதுவும் சுல்தான்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது. முக்கியமாக இந்த தெருவில் 80 சதவீதம் இஸ்லாமியர்களும், 20 சதவீதம் இந்துகள் இன்றளவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் .
காஜிமார் பள்ளி வாசல் :
காஜிமார் பள்ளிவாசல் தெருவோடு மட்டும் நின்றுவிட முடியுமா ? அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப் பழமையான பள்ளிவாசல் பற்றி தெரிந்துகொள்வோம். இந்த பள்ளிவாசலுக்கு காசிமார் பெரிய பள்ளிவாசல் என்ற பெயரும் உண்டு. காசிமார் மசூதி என்பது மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மசூதி ஆகும். இது பெரியாலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு திசையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து தென்மேற்கு திசையில் 800 மீட்டர் தொலைவிலும் கம்பீரமாக வீற்றுள்ளது.
பழமையான மசூதியான இது ஹஸ்ரத் காஜி சையத் தாஜுதீன் அவர்களால் கட்டப்பட்டிருக்கிறது. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் இறைத்தூதர் முகமதுவின் வழித்தோன்றலாக அறியப்படுகிறார். மதுரையில் உள்ள மசூதிகளிலேயே மிக பழமையானதாக இது கருதப்படுகிறது. ஓமன் நாட்டிலிருந்து வந்த அவருக்கு பாண்டிய மன்னர் குலசேகர பாண்டியன் இந்த மசூதி அமைந்துள்ள இடத்தை கையளித்ததாக சொல்லப்படுகிறது.
பெரிய மசூதி அல்லது பெரிய பள்ளிவாசல் என்று இது பிரசித்தமாக மதுரையில் அறியப்படுகிறது. 1200 பேர் ஒரே சமயத்தில் தொழுகை புரியக்கூடிய அளவிற்கு இடவசதியை கொண்டுள்ள இம்மசூதி இப்பகுதியில் மிகப்பெரியதாகும். மதுரை ஹஸரத் எனும் தர்க்காவும் இந்த மசூதியின் வளாகத்திலேயே அமைந்துள்ளது.
காசி சையத் தாஜுதீன்:
இந்த மசூதியை நிறுவியவர் காசி சையத் தாஜுதீன். அவர் 13 ஆம் நூற்றாண்டில் யேமனில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற ஜமாலுதீன் முப்தி அல் மாபரியின் மகன் ஆவார். சையத் தாஜுதீனின் மூத்த சகோதரர் சையத் அலாவுதீன் கயல்பட்டினத்தில் குடியேறினார். அவர் இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறார்.
சையத் தாஜுதீன் மதுரையில் குடியேறி 1281 ஆம் ஆண்டில் இந்த மசூதியை நிர்மாணிக்கத் தொடங்கினார். கட்டுமானம் 3 ஆண்டுகள் ஆனது மற்றும் 1284 ஆம் ஆண்டில் தொழுகைக்காக மசூதி திறக்கப்பட்டது. இந்த மசூதியின் நிறுவனர் ஹஸ்ரத் காசி சையத் தாஜுதீன் 15 ராஜாப் 692 ஹிஜ்ரி – மார்ச் 1293AD மற்றும் மசூதியைச் சுற்றியுள்ள பெரிய கல்லறையில் புதைக்கப்பட்டது.
நிறுவனர் தினம் இந்த மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் ராஜாப் 15 ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து மக்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் சியாரத்துக்காக இங்கு வருகிறார்கள். பெரியா ஹஸ்ரத்தின் ஆண்டு யூரஸ் ரமலான் 13 ஆம் தேதியும், சன்னாவல் ஹஸ்ரத் 28 ஆம் தேதி ஷவ்வாலும் நினைவுகூரப்படுகிறது. சையத் அப்துஸ் சலாம் இப்ராஹிம் சலிம் ஹஸ்ரத்தின் ஆண்டுவிழா 18 ஆம் தேதி ரபியுல் ஆகிர் கொண்டாடப்படுகிறது.
மக்பரா:
மதுரை மக்பரா, மதுரை அசரத்துகளான (அசரத்து மீர் அகமது இபுறாகீம், அசரத்து மீர் அம்சத்து இபுறாகீம் மற்றும் அசரத்து சையது அப்து சலாம் இபுறாகீம்) ஆகியோரின் தர்காக்களும் இதனுள் அமைந்துள்ளன. காசி சையது தாசுத்தீன் வழித்தோன்றல்களில் பெரும்பாலானோர் இப்பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளிலே வசித்து வருகின்றனர் (காசிமார் தெரு). சையது தாசுத்தீன் சுல்தான்களின் காசியாக இருந்தார்.
அவரில் துவங்கி இன்றைய மதுரை மாநகர அரசாங்க காசி சையது காசா முயீனுத்தீன் வரை சையது தாசுத்தீன் அவர்களின் வழித்தோன்றல்களே தமிழ்நாடு அரசின் காசிகளாக நியமிக்கப்படுகின்றனர். அனைத்து சையதுகளும் சுன்னி இசுலாத்தின், ஹனபி பிரிவைச் சார்ந்தவர்கள்.பெரும்பாலானவர்கள் ஃபாஸிய்யா அஷ் ஷாதுலியா சூஃபி பிரிவை சார்ந்தவர்கள்.
மதரஸா:
காசி சையத் தாஜுதீன் அரபி மதரசா மசூதி வளாகத்திற்குள் அமைந்துள்ளது. இதில் சுமார் 120 மாணவர்கள் அடிப்படை அரபு மொழியைக் கற்கின்றனர். காசிமர் பெரிய மசூதியால் நிர்வகிக்கப்படும் இந்த மதரஸாவை மெளலவி ஹபில் சையத் அலிமுல்லா பாக்கா (Moulavi Hafil Syed Alimullah Baqa) நடத்துகிறார்.
பள்ளிவாசல் கட்டமைப்பு:
கிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது 1890 இறுதியில் முதல் கட்டமைப்பும், 1940 மத்தியில் இரண்டாவது கட்டமைப்பும், 1983 இறுதி கட்டமைப்பும் பெற்று கம்பீரமாக இன்றளவும் உள்ளது. பள்ளிவாசல் இருக்கும் தெருவிற்கு 1942ல் காஜிமார் தெரு என்ற பெயரும் மக்களால் அழைக்கப்பட்டு நாளாடைவில் அப்பெயர் நிலையானதாக மாறி இன்றளவும் அப்படியே நிலைபெற்றுவிட்டது.
காஜிமார் பள்ளிவாசலின் கட்டமைப்பு ஒரு கோட்டையைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக இருக்கும்.இந்தப் பள்ளிவாசலில் அலுவலகத்தில் பல இந்துமக்களும் பணி புரிகின்றனர். இந்த பள்ளிவாசலில் இருக்கும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராமங்களுக்கு இலவசமாக தண்ணீர் தரப்படுகிறது.
மேலும் வயதான இசுலாமிய முதியோர்களுக்கு இந்த பள்ளிவாசல் சார்பில் மாதந்தோரும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இலவச நூலகமும் இந்தப்பள்ளிவாசலில் இன்றளவும் செயல்பட்டு கொண்டு வருகிறது. இன்னும் பழமை மாறாமல் அப்படியே இருக்கும் பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
காசி சையத் தாஜுதீனின் வழித்தோன்றல்:
காசி சையத் தாஜுதீனின் வழித்தோன்றல்கள் இந்த மசூதியின் ஹுக்தார்ஸ் (பங்குதாரர்கள்) என்று குறிப்பிடப்படுகின்றன. இன்றைய ஹுக்தார்கள் காசி சையத் தாஜுதீனின் 19 மற்றும் 20 ஆம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஒரு மூதாதையரிடமிருந்து தோன்றி 7 நூற்றாண்டுகளாக ஒரே வட்டாரத்தில் வாழ முடிந்தது, சுமார் 450 ஹுக்தார்கள் வம்சாவழியினருடனும், திருமண உறவுகளுடனும் நெருக்கமாக தொடர்புடையவர்கள். காசிமர் பிக் மசூதி காசி சையத் தாஜுதீனின் (ஹுக்தார்ஸ்) சந்ததியினரால் மசூதி தொடங்கப்பட்டதிலிருந்து எந்த இடைவெளியும் இல்லாமல் நிர்வகிக்கப்படுகிறது.
மசூதியை நிறுவியவரின் சந்ததியினரால் மசூதியை நிர்வகிக்கும் உரிமை தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் 1954 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துக்களுக்கும் இந்தியா சுதந்திரத்திற்குப் பின் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காசி சையத் தாஜுதீனின் அனைத்து வாரிசுகள் மற்றும் இந்த மசூதியின் மேலாளர்களின் பரம்பரை பதிவுகள் மசூதி அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்றன. அனைத்து சையத்களும் இஸ்லாத்தின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவை, அதன் ஹனாபி பள்ளி மற்றும் காசி சையத் தாஜுதீனின் சந்ததியினரில் பெரும்பாலோர் சூஃபி ஒழுங்கை (தாரிகா) ஃபாசியா சாம்பல் ஷாசுலியாவை கடைபிடிக்கும் ஷாஜூலிகள்.
மசூதி வாரிசு நிர்வகிகள்:
காசி சையத் தாஜுதீனின் அனைத்து 450 வாரிசுகளும் (இந்த மசூதியின் சையத் – ஹுக்தார்ஸ்) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பொது அமைப்பைக் கொண்டுள்ளது. தற்போது, இந்த மசூதியை நிறுவிய காசி சையத் தாஜுதீனின் வழித்தோன்றல்களான இந்த மசூதியின் ஹுக்தார்களிடமிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு அறங்காவலர் குழுவினரால் இந்த மசூதியை நிர்வகித்து வருகிறது.
அவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். நிர்வாகக் குழுவில் உள்ள இடங்களை நான்கில் இருந்து பதினான்கு ஆக உயர்த்த 2017 ஜனவரியில் மசூதியின் ஹுக்தார்களின் பொதுக்குழு தீர்மானித்தது. முந்தைய நான்கு பேர் கொண்ட குழு அறங்காவலர்களாகவும், பத்து பேர் கொண்ட கூடுதல் குழு நிர்வாக உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.