செய்திகள்மாநகராட்சி

புதிய கழிவுநீரேற்று கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட்டுறவுத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.21 பெத்தானியாபுரம் பல்லவன் நகரில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீரேற்று கிணறு அமைக்கும் பணியினை துவக்கி வைத்து, வார்டு எண்.22 விராட்டிபத்தில் மேற்கு சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆணையாளர் ச.விசாகன், தலைமையில்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜீ இன்று (03.03.2020) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் சேகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் கோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

20 − five =

Related Articles

Close