கள்ளந்திரி & மாத்தூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்
Kallandri & Mathur Panchayat Gram Sabha meeting

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் கள்ளந்திரி ஊராட்சியில், கிராம சபைக் கூட்டம், தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிட்டம்மாள், துணைத் தலைவர் அழகன், வருவாய்த்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உட்பட பல கலந்து கொண்டனர்.
கழிவு நீர் வாய்க்கால் வசதி, திருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தருதல், விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால், 100 நாள் வேலை திட்ட பணியாளர்ளை விவசாயம் அனைத்து பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை எடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் பாண்டி நன்றி கூறினார்.
இதேபோல் மதுரை மாவட்டம், மாத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் குணவதி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஞானசேகரன், மாத்தூர் விஏஓ ரவிச்சந்திரன், பிள்ளைச்சேரி விஏஓ கோகிலா, கொல்லங்குளம் விஏஓ அருள், கிழக்கு ஒன்றிய அலுவலர் சுந்தரி உட்பட அங்கன்வாடி, நியாய விலை கடை பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உட்பட பல கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், திரவ கழிவு மேலாண்மை திட்டம், முழு சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்பு, முதியோர் உதவித்தொகை வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் உமா நன்றி கூறினார்.