கலை இசைவீடியோ

கலை வழி சமூக கல்வி | வீதி நாடகக் கலை | ஜெயகுமார் | வேர்வை கலைக்குழு | கருமாத்தூர்

Art Way Social Education | Street Drama | Jayakumar | Karumathur

#வீதிநடாகம் #கருமாத்தூர் #கலைக்குழு

கலை வழி சமூக கல்வியை இசை வடிவிலும், வீதி நாடகங்கள் , தெருக் கூத்துக்கள், கருவிகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் வீதி நாடகக் கலைஞர் திரு.ஜெயகுமார் அவர்கள். நாடக பின்புல குடும்பத்திலிருந்து இவரது பயணம் ஆரம்பமாகியுள்ளது.

முக்கியமாக நாடகங்கள் வாயிலாக பள்ளி குழந்தைகளுக்கு சமூக அவலங்களை எடுத்துக் கொண்டு செல்லும் அரும் பணியை புரிகின்றார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு கலை வழி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகச் சிறந்த செயலாகும்.

கருமாத்தூர் வேர்வை கலைக் குழு எனும் பெயரில் தனது சமூகத்திற்கான அனைத்து வகையான விழிப்புணர்வு பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றார். பொருளாதார நெருக்கடி நமயங்களிலும் தனது குழுக்களுடன் இணைந்து பொது நலன் கருதியே வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் நடத்தி வருகின்றார்.

அழிவின் விழிப்பில் அதாவது, கற்றுக் கொடுக்க ஆள் இல்லாத மரபுக் கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய பணியை தொடர்ந்து செய்து வருகின்றார். நீண்ட நெடிய இந்த கலைப் பயணத்திற்கு அனைவரும் அறிந்து கொண்டு, இதுபோன்ற மரபு கலைஞர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு அவர்களுக்கு உண்டான அங்கீகாரத்தை அளிப்பதே மிக முக்கியம்.

சமூகம் சர்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆதி கலைகளை அழியாமல் காப்பாற்றி வரும் திரு.ஜெயகுமார் அவர்களை நேர்காணல் செய்தை நாங்கள் பெருமையாக கருதுகின்றோம். இவர்போல் எந்தச் சூழ்நிலையிலும் சமூகம் சார்ந்த சிந்தனைக்கு தூண்டுகோளாக விளங்கும் கலைஞர்களை வாழ்த்தி வணங்குவோம்.

இந்த காணொளி முதற்கட்ட துவக்க பயணம் என்பதை இங்கே பதிவு செய்கின்றேன். கலை வழி சமூகப் பயணம் பல பலைஞர்களுடன் தொடரும் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கின்றேன். இந்த நேர்காணல் ஏற்பாடு செய்து கொடுத்த திரு.பிரச்சன்னா அவர்களுக்கு எங்களது நன்றிகள்.

சமூக அக்கறை சார்ந்த நாடக கலை நிகழ்ச்சி அழைக்கலாம். தொடர்பு எண் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி 02 ல் சந்திப்போம்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: