
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்
வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை
மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும்
வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவுத்துறை, உணவு மற்றும்
நுகர்வோர் காப்பகம் துறை.
மேலும், பால்வளத்துறை, கால்நடைத்துறை, மீன்வள மற்றும் மீனவர்
நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நீர்வள ஆதாரத்துறை, தமிழ்நாடு காதி மற்றும்
கிராமப்புற தொழற் கழகம் மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து,
நலிவுற்ற கிராம பஞ்சாயத்துக்களை தன்னிறைவு பெற்ற கிராம பஞ்சாயத்துக்களாக
மாற்றிட அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 58 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும்
2022-23ம் ஆண்டில் 112 பஞ்சாயத்துக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தரிசு நிலங்களை விளை
நிலங்களாக்குதல், நீர்வள ஆதாரத்தை உருவாக்குதல், சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்
செட் அமைத்தல், நுண்ணீர் பாசன முறைகளை பின்பற்றுதல், மதிப்பு கூட்டிய வேளாண்
விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், சமூக காடுகளை உருவாக்குதல் ஆகிய
சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
2021-22ல் இதுவரை 22 தரிசு நில தொகுப்புகள் சொசைட்டி சட்டத்தின் கீழ்
பதிவு செய்யப்பட்டு வருகிறது மற்றும் இத்தரிசு நிலத்தொகுப்பில் நீர்வள ஆதாரத்திற்கு,
போல்வெல் அல்லது குழாய் கிணறு அமைக்க வேளாண் பொறியியல் துறையுடன்
இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் 70% மானியத்தில், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல் மற்றும் இதர மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
மதுரை மாவட்டம் – கிராம பஞ்சயத்துக்கள் விபரம்
1) கல்லணை (அலங்காநல்லூர்)
2) டி. மேட்டுப்பட்டி
3) கல்வேலிப்பட்டி
4) மேட்டுப்பட்டி
5) கருமாத்தூர்
6) விக்கிரமங்கலம்
7) வேப்பனூத்து
8) முதலைக்குளம்
9) கள்ளிக்குடி
10) எஸ்.பி.நத்தம்
11) குராயூர்
12) கெ.வெள்ளக்குளம்
13) கல்லணை(கள்ளிக்குடி)
14) வாஞ்சிநகரம்
15) கச்சிராயன்பட்டி
16) சென்னகரம்பட்டி
17) கொடுக்காம்பட்டி
18) அய்யாப்பட்டி
19) சக்கிமங்கலம்
20) ஒத்தக்கடை
21) அரும்பனூர்
22) மீனாட்சிபுரம்
23) கள்ளந்திரி
24) வெள்ளியங்குன்றம்
25) செட்டிக்குளம்
26) வீராபண்டி
27) ஆளத்தூர்
28) இரணியம்
29) உறங்காண்பட்டி
30) சருகுவலையபட்டி
31) ஆமூர்
32) நாவினிபட்டி
33) திருவாதவூர்
34) நரசிங்கபட்டி
35) குடிசேரி
36) மல்லபுரம்
37) தாடயம்பட்டி
38) பெரியக்கட்டளை
39) வேலாம்பூர்
40) கெஞ்சம்பட்டி
41) சிட்டுலட்டி
42) எஸ்.அரசப்பட்டி
43) புல்கட்டை
44) மோதகம்
45) உச்சப்பட்டி
46) கின்னிமங்கலம்
47) உரப்பளூர்
48) அ.கொக்குளம்
49) தணக்கனகுளம்
50) வடபழஞ்சி
51) கரடிப்பட்டி
52) போத்தம்பட்டி
53) நடுப்பட்டி
54) தொட்டப்பநாயக்கனூர்
55) நக்கலப்பட்டி
56) தென்கரை
57) மேலக்கால்
58) இரும்பாடி
தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் சமுதாய கிணறு, நீர் அமிழ்வு
குட்டைகள், பண்ணை குட்டைகள், அடர் மர நடவு, சாலையோர மரங்கள் நடுதல்,
வயலோர வண்டிப்பாதைகள் அமைத்தல் போன்ற தேவைகள் ஆய்வு செய்து விரிவான
திட்ட அறிக்கையில் தயார் செய்து ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து துறைகளின் 80% திட்ட நிதியும், தேர்வு
செய்யப்பட்ட இக்கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் தொடர்பாக 10.05.2022 மற்றும் 07.06.2022 ஆகிய இரு தினங்களில்
58 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பட்டா
மாறுதல், வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர்
பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு குறு விவசாயி சான்று வழங்குதல்,
விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு, தோட்டக்கலை
மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.
மேலும் காலை 8.00 மணி முதல் கால்நடைகளுக்கான சிறப்பு நோய்தடுப்பு
முகாம்களும் இவ்விரு நாட்களில் நடைபெறவுள்ளது. எனவே, விவசாய பெருமக்கள்
அனைவரும் இம்முகாம்களில் தவறாது கலந்து கொண்டு அனைத்து துறை
திட்டங்களின் பயன்களையும் அடையுமாறு மாவட்ட ஆட்சியர்
தெரிவிக்கிறார்.