இயற்கை மருத்துவம்மருத்துவம்

கருஞ்சீரகத்தின் கருணை

கருஞ்சீரகத்தின்(Karunjeeragam) அறிவியல் பெயர் நிஜெலா சட்டைவா(Nigella sativa). இதைக் கலோன்ஜி(kalonji) என்றும் குறிப்பிடுவார்கள். கருஞ்சீரகத்தில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், கரோட்டின், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற பல்வேறு விதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள் சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகின்றன.

தீராத சளி, இருமல் போன்ற தொல்லைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். தினம் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து அருந்துவதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும். தீராத ஆஸ்துமா தொந்தரவு கூட, தினம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாகக் கட்டுக்குள் வரும். வெந்நீரில் தேன் மற்றும் ஒரு கையளவு கருஞ்சீரகப் பொடியைக் கலந்து கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பருகி வரச் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் முழுவதுமாக கரையும்.

வயிற்றுப் புண் ஏற்பட்டுச் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரகப் பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்வதால் வயிற்றில் ஏற்பட்ட புண்கள் அனைத்தும் சீக்கிரம் ஆறிவிடும். கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து பாலில் கலந்து கொள்ளவும்.இதை முகத்தில் தொடர்ந்து பூசி வர முகத்தில் ஏற்பட்டுள்ள முகப்பருக்கள்,கொப்பளங்கள்,புண்கள் மறையும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × one =

Related Articles

Close