பெட்ஸ்வீடியோ

கம்பீரமான கில்லாரி மாடு | கில்லர்

khillari cattle | History

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம்ம சேனல்ல, அழிவில் இருக்க கூடிய இந்திய மாட்டினங்கள் குறித்து தொடர்ச்சியா வீடியோக்கள் பார்த்துக்கிட்டு இருக்கோம். அந்த வகையில, இன்னைக்கு நாம பார்க்கப்பேவாது, கில்லாரி எனும் மாட்டைப் பற்றித்தான் வாங்கி வீடியோவுக்குள்ள போவோம்.

முதல்ல இந்த கில்லாரி மாடு பார்ப்பதற்கு ஹலிக்கர் மாடுபோல காட்சி அளிக்கும். ஏன்னா ஹலிக்கர் இனத்திலிருந்து கில்லாரி மாடு வந்ததாக சொல்லப்படுகிறது. அதனாலமைசூரில் இருந்து வந்த ஹல்லிகர் இனம்தான் கில்லாரி மாடுகளின் மூதாதையர்கள். கில்லாரி என்ற பெயருக்கு கால்நடைகளின் கூட்டம் அப்டீனு அர்த்தம். அதேபோல கில்லாரி என்ற சொல்லுக்கு மேய்ப்பவர் அப்டீனும் அர்த்தம் உண்டு.

இந்த வகையான மாடுகள், பொதுவா, அதிகமா மகாராஷ்டிரா முழுக்க இருக்கு. முக்கியமா விவாச பணிக்கும், ரேஸ்க்கும் இந்த மாட்ட பயன்படுத்திட்டு வர்றாங்க. அதாவது மகாராஷ்டிரா பகுதியான சாங்லி, கோலாப்பூர், சோலாப்பூர் மற்றும் புனே, அகமதுநகர், நாசிக், பிஜாப்பூர்/னு கர்நாடக மாவட்டப் பகுதிகளில்லையும் இந்த வகையான மாடுகள் வளர்த்துட்டு வருது. சமீப காலமா இந்த மாடுகளுடைய எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுகிட்டே வருது.

கில்லாரி மாடுகள்ல 9 வகைகள் இருக்கு. ஆட்பாடி, மஸ்வத், பந்தர்புரி கோசா, ஹர்ன்யா, டாப்லியா, பிரம்மனி, தங்கிரி, நகாலி அப்பீங்குற 9 வகை மாடுகள் எல்லாமே நிறத்தை வச்சு, அதுக்கு பெயர வச்சுருக்காங்க.

கில்லாரி மாடுகளட பொதுவா 4½ அடி முதல் 5½ அடி உயரம் வரை வளரக்கூடியது. பெண் மாடு 350 முதல் ஆண் மாடு 450 கிலோ வரை எடை இருக்கும். பசுமாடு ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் அதிக பட்சம் 5 லிட்டர் வரை கொடுக்கும்னு சொல்றாங்க. அதாவது ஒரு வீட்டிக்குத் தேவையான பாலை இந்த மாடுகள் கொடுக்குது.

கடுமையான வறட்சியான பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக்கூடியது. இயல்பாவே இந்த மாடுகளுடைய தோல்கள் ரொம்ப இறுக்கமா இருக்கும். இதோட முகம் குறுலாக நீளமா இருக்கும். நல்லா தடிமனான அதே சமயத்துல வலுவான மூட்டுகள் இந்த மாட்டுக்கு உண்டு. வால் நல்லா சன்னமா, நீளமா இருக்கும்.

கொம்புதான் இந்த மாட்டோட தனிச்சிறப்பே, பார்ப்பதற்கு வில் மாதிரி அவ்ளோ அழகா இருக்கும். திமிலோட இந்த கொம்ப பார்க்கும்போது அதன் அழகே தனிதான். சில மாட்டுக் கொம்பு நேராகவும், சில மாட்டுக் கொம்பு பின்புறம் சாய்ந்து திமில தொட்டுக்கிட்டு இருக்கும்.
இரண்டுமே செம்ம அழகுதான். இளஞ் சிவப்பு கலரில்லையும், கருப்பு நிறத்துலையும் கொம்பு இருக்கு.

முக்கியமா இந்த மாட்டோ கண்ணும் தனிதான். நல்ல மீன் கண்ணுபோல நீளமா இருக்கும். ரொம்ப சின்னக் காதும், காதோட உள் பகுதி மஞ்சள் நிறத்துலையும் இருக்கும்.

கலர பொருத்தவரைக்கும். ஏற்கனவே சொன்னது போல நிறத்த வச்சு 9 வகையா பிரிச்சு இருக்காங்க. அதுல பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது வெள்ளை நிற மாடுகளத்தான். அதோட சாம்பல் கலரும் சேர்ந்திருக்கும் மாடும் அதிக பேர் வளக்குராங்க. வெள்ளை, சாம்பல், செங்கல் நிறம், கருப்பு புள்ளி இப்டி சின்ன சின்ன கலர் காமினேசன்ல மாடுகள பார்க்கலாம்.

புதிதாகப் பிறந்த கன்ளுக்குட்டி திக்கான சிவப்பு நிறத்துல இருக்கும், ஆனா இரண்டு மூனு மாசத்துல இந்த கலரு மாறிரும்.

வேகத்துக்கு பெயர்போன இந்த மாடு, செம பவர்புல்லானது. முரட்டுத்தனமானது.

இந்த மாட்டுக்கு உணவுன்னு எடுத்துக்கிட்டா, மக்காச்சோளம், பார்லி, ஜோவர், பஜ்ரா, கிராம், கோதுமை, ஓட்ஸ், தவிடு, அரிசி பாலிஷ், சோள உமி, உலர் தானியங்கள், வேர்க்கடலை தோல், பருத்தி விதை தோல், எள் தோல், ஆளி விதை தோல், நொறுக்கப்பட்ட குவார், மரவள்ளிக்கிழங்கு இதெல்லாம் கொடுக்குறாங்க.

பசுந்தீவனம்னு எடுத்துக்கிட்டா, பெர்சீம், ரைகிராஸ், குவாரா, செஞ்சி, ஜோவர்), சோளம், பஜ்ரா, நேப்பியர் பஜ்ரா, சூடான் அப்டீங்குற புல் வகைகளும், உலர் தீவனத்துல வைக்கோல், பூண்டு வைக்கோல், வைக்கோல், ஓட்ஸ் வைக்கோல், கரும்பு தட்டை, மக்காச்சோள தட்டை கொடுக்குறாங்க.

கில்லாரி மாடுகள் தற்போதைய மொத்த எண்ணிக்கை குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்கல, அப்டீனாலும், கண்டிப்பா இந்த இன மாடுகள் கனிசமான அளவு குறைஞ்சுக்கிட்டே வருது. முக்கியமா சத்புரா மலைத்தொடரில், தில்லாரிஸ் எனப்படும் மலை வாழ் மக்கள்தான் தொழில் முறையா கில்லாரி காளைகளை உற்பத்தி செய்றாங்க. கூடுதலா மஹாராஷ்டிரா அரசால் ஹிங்கோலி, ஜாத் மற்றும் ஜுனோனி ஆகிய இடத்துலையும், கர்நாடக அரசு சார்பில் பங்கபூரில் எனும் இடத்துல கில்லாரி மாடுகளின் இனப்பெருக்கம் நடக்குது.

அற்புதமான இந்திய நாட்டு இன மாடுகளில் ஒன்றான கில்லாரி விசயம் நமக்கு கிடச்சது உண்மையாவே கொஞ்சம்தான். மகாராஷட்ரா பக்கம் போனா இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும். கம்பீரமான தொற்றமும், ரசிச்சுக்கிட்டே இருக்குற மாதிரியான கொம்பும் உடைய கில்லாரி மாடுகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்துபதுதான் சோகமான விசயம்.

நாட்டு மாடுகளை மீட்டு வளர்க்கும் நம்மூருக்காரங்க, இந்த மாட்டை வாங்கி வந்து வளர்த்து இனப்பெருக்கம் செய்து, எண்ணிக்கைய கூட்டுனா ரொம்ப சந்தோசம் அப்டீங்குற தகவலோடு, உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.

 

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: